திங்கள், 6 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 14 செப்டம்பர் 2025 (12:34 IST)

இன்னைக்கு இந்தியாதான் ஜெயிக்கணும்..! பாகிஸ்தான் தோக்கணும்! சிறப்பு யாகம் செய்த விஷ்வ ஹிந்து பரிஷத்!

VHS special yagam

இன்று ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் நிலையில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சிறப்பு யாகம் நடத்தியுள்ளனர்.

 

ஆசியக்கோப்பை 2025 டி20 போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து துபாயில் நடந்து வருகிறது. அதில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இரு நாடுகளுக்கிடையே பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக போர் நடந்த நிலையில் இந்த போட்டி நடக்கக் கூடாது என பலமான எதிர்ப்புகள் பல தரப்பில் ஏற்பட்டது.

 

ஆனாலும் இன்று இரவு 8 மணியளவில் போட்டிகள் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்க வேண்டும், இந்தியா ஜெயிக்க வேண்டும் என உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் கோபால் ராய் பேசியபோது “இந்தியா நிச்சயமாக இதில் வெற்றி பெறும். இந்த போட்டி நடக்கக்கூடாது என சிலர் கூறுகிறார்கள். ஆனால் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்த முடியும் என காட்டுவதற்கு இது நமக்கு ஒரு வாய்ப்பு” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K