திங்கள், 29 செப்டம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 15 செப்டம்பர் 2025 (10:27 IST)

ஏன் பாகிஸ்தான் வீரர்களோடு கைகுலுக்கவில்லை… கேப்டன் சூர்யகுமார் யாதவ்வின் பதில்!

ஏன் பாகிஸ்தான் வீரர்களோடு கைகுலுக்கவில்லை… கேப்டன் சூர்யகுமார் யாதவ்வின் பதில்!
அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளைக் கடந்த 15 ஆண்டுகளாக விளையாடுவதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதுகின்றன. சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதலை அடுத்து இரு அணிகளும் நேற்று ஆசியக் கோப்பைத் தொடரில் மோதின.

இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இந்த போட்டி முடிந்ததும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. அதே போல டாஸ் போட்டபோதும் இரு அணிக் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. கிரிக்கெட் போட்டிகள் முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது நூறாண்டு காலமாக நீடித்து வரும் வழக்கம்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இதுகுறித்தக் கேள்விக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார். அதில் “எங்கள் அரசும், பிசிசிஐ-யும் சேர்ந்து செயல்படுகின்றன. நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாடதான் வந்தோம். நாங்கள் விளையாடி சிறப்பான பதிலைக் கொடுத்துள்ளதாக நினைக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.