புதன், 26 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 அக்டோபர் 2025 (14:16 IST)

ஆப்கானிஸ்தானுக்கு பதில் எந்த நாடு? முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இணைந்த அணி இதுவா?

Afghanistan
பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கவிருந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலகியுள்ளது.
 
பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் பாக்டிக்கா மாகாணத்தில் நடத்திய வான்வழி தாக்குதலில், நட்புறவு போட்டியில் விளையாட சென்ற கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் உட்பட 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முத்தரப்பு தொடரிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
 
ஆப்கானிஸ்தானின் விலகலை தொடர்ந்து, அந்த அணிக்கு பதிலாக ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இந்த முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.
 
Edited by Siva