புதன், 26 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 18 அக்டோபர் 2025 (11:23 IST)

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை:  டிரம்ப்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான மோதலை தீர்ப்பது தனக்கு "எளிதானது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 
 
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் நடந்த சந்திப்பின்போது பேசிய அவர், தான் ஏற்கனவே மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றி, பல உலகளாவிய போர்களை தீர்த்துள்ளதாகப் பெருமிதம் கொண்டார்.
 
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் டிரம்ப் இப்படி கருத்துத் தெரிவித்துள்ளார். சமீபத்தில், பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் 48 மணி நேர சண்டை நிறுத்தம் முறிந்துவிட்டதாக தலிபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
டிரம்ப் மேலும் கூறுகையில், தான் எட்டு போர்களை தீர்த்துள்ளதாகவும், ஆனால் நோபல் அமைதி பரிசு தனக்கு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். "எனக்கு நோபல் பரிசு பற்றி கவலை இல்லை, உயிர்களை காப்பாற்றுவது மட்டுமே என் நோக்கம்" என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran