புதன், 26 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 அக்டோபர் 2025 (18:27 IST)

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

Pakistan afghanistan war
பாகிஸ்தானுக்கு சொந்தமான ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
 
எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு ஆப்கானியப் படைகள் பதிலடி கொடுத்ததாகவும், இதில் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ராணுவ டாங்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் முஜாகித் தெரிவித்தார்.
 
இதற்கிடையில், பாகிஸ்தானிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ராணுவ டாங்கிகள் அணிவகுத்து செல்லும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. 
 
ஆனால், பாகிஸ்தான் இந்த கூற்றை மறுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், "வீடியோவில் காணப்படும் டாங்கிகள் எங்களுடையவை அல்ல. அவர்கள் அதை ஏதாவது பழைய இரும்பு கடையிலிருந்து வாங்கியிருக்கலாம்," என்று கிண்டலாக கூறியுள்ளார்.
 
விசாரணையில், வீடியோவில் இருப்பது சோவியத் காலத்து T-55 டாங்கி என்றும், அது 1980-களில் இருந்தே ஆப்கானிஸ்தான் வசம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
 
Edited by Mahendran