எல்லாரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிவிட முடியாது!.. துரைமுருகனே சொல்லிட்டாரே!..
நடிகர் விஜயை தொடர்ந்து நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இருவருமே சமீபத்தில் தங்களின் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் சந்திப்பை நடத்தினர். இதில் தனுஷ் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
நேற்று கூட தனுஷ் தனது ரசிகர் மன்ற பெண் நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு அவர்கள் அனைவருக்கும் காமாட்சி விளக்கையும் பரிசளித்தார். இது தொடர்பான வீடியோக்கள் இன்று காலை முதலே சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து தெரிவித்த திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் ஒருவன் இளநீர் கடை வைத்து நன்றாக விற்பனையானால் அத்போல பலரும் கடை வைப்பார்கள். அதேபோன்ற கேஸ்தான் இந்த நடிகர்கள். இதெல்லாம் நிற்காது. எல்லோராலும் எம்.ஜி.ஆர், ஜோசப் விஜய் ஆகிவிட முடியாது என தெரிவித்திருக்கிறார்.