1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dhanush asking fans to do medidate in home

தியானம் பண்ணுங்க!.. ஒளி தெரியும்!.. ரஜினி ரூட்டில் ஆன்மிக அரசியல் பேசும் தனுஷ்...

dhanush rajini
சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது ரசிகர்கள் முன்பு பேச்சு அவர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என்கிற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது. ஆனால், தனுஷோ இப்போது வரை இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில்தான் நேற்று செம்மஞ்சேரியில் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை தனுஷ் சந்தித்தார். அவர்களில் 3 ஆயிரம் பெண் நிர்வாகிகளுக்கு வெள்ளி காமாட்சி விளக்கையும் தனுஷ் பரிசளித்தார். அந்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததுதான் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த விழாவில் பேசிய தனுஷ் ‘எல்லோரும் தியானம் பண்ணுங்கள். உங்கள் வீட்டில் பூஜை அறையில் அமருங்கள். கண்ணை மூடி தியானம் பண்ணுங்கள்.. முதலில், உங்கள் மனதில் ஒரு குரல் கேட்கும்.. அந்த குரல் நல்லதை பேசும்.. கெட்டதை பேசும்.. அசிங்கத்தை பேசும்.. அழுக்கை பேசும்.. அதை பேச விடுங்கள்.. ஒரு வாரம் ஆகும்.. ஒரு மாதம் ஆகும்.. அந்த குரல் பேசி பேசி ஓய்ந்துவிடும்.

அதன்பின் உள்ளிருந்து உங்களுக்கு ஒரு குரல் கேட்கும்.. அந்த குரல் உங்களை வழிநடத்தும்.. உங்களுக்கு நல்ல விஷயத்தை சொல்லித்தரும்.. நல்ல முடிவை எடுக்க சொல்லித்தரும்’ என்று பேசியிருக்கிறார்.

பல வருடங்களாக  தனுஷின் மாமனார் ரஜினிதான் இப்படி மேடைகளில் தியானம் பற்றி பேசுவார்.. தற்போது தனுசும் அதே ரோட்டில் பயணிப்பதால் மாமனார் ரஜினியை போல ஆன்மீக அரசியல் அவர் கையில் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு தனுஷ் டெல்லி சென்று சில ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ரசிகர்களுக்கு தனுஷ் கொடுத்த விளக்கில் தாமரை சின்னம்!.. ஓ அப்படி போகுதா!...