செவ்வாய், 30 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 செப்டம்பர் 2025 (08:01 IST)

கரூர் துயர சம்பவத்தில் என்ன நடந்தது? பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் தகவல்..!

கரூர் துயர சம்பவத்தில் என்ன நடந்தது? பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் தகவல்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
 
இது குறித்து பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் விளக்கம் அளித்துள்ளார். உயிர் இழந்தவர்களில் 10 பேர் குழந்தைகள், 16 பேர் பெண்கள் மற்றும் 12 பேர் ஆண்கள் என்று அவர் தெரிவித்தார். மேலும், விஜய்க்கு வரவேற்பு அளித்த இடத்தில் இருந்து பலர் வாகனத்தை பின்தொடர்ந்து வந்ததால் கூட்டம் அதிகரித்ததாகவும், விஜய் பேச ஆரம்பித்தபோது காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததாக நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
 
தமிழக வெற்றிக் கழகத்தின் விண்ணப்பத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நேரம் கேட்டிருந்ததாகவும், ஆனால் அக்கட்சியின் எக்ஸ் தளத்தில் நண்பகல் 12 மணிக்கு விஜய் வருவதாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், விஜய் தாமதமாக வந்ததாகவும் கூறினார்.
 
தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்ட இடத்தின் அடிப்படையில்தான் இடம் ஒதுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். பத்தாயிரம் பேருக்கு அனுமதி பெற்று 27 ஆயிரம் பேர் கூடினார்கள் என்றும், விஜய் அனுமதி கேட்ட நேரமும் வந்த நேரமும் வேறு வேறு என்றும், தாமதம் காரணமாக கூட்டம் அதிகரித்ததாகவும், கட்சியினருக்கு ஏற்கனவே காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது என்றும் கூறினார். விசாரணைக்கு பின் முழு விவரம் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva