தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து நடிகர் ரஞ்சித் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூரில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஞ்சித் “மதுரை மாநாட்டில் விஜய் தம்பி, பிரதமர் மோடியின் பெயரை சொடக்கு போட்டு சொல்கிறார். இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் செய்தவர் என பிரதமரை கூறுகிறார். ஆனால் இதே விஜய் 2014ல் பிரதமரை சந்திக்க கையைக் கட்டிக்கொண்டு நின்றார். எதற்காக? கச்சத்தீவை மீட்கவா? மீனவர்கள் நலனுக்காகவா? எதுவும் இல்லை.தனது தலைவா படம் ரிலீஸ் பிரச்சினைக்காக பிரதமரை பார்த்தார்.
அப்படிப்பட்டவர் இப்போது பிரதமரை சொடக்கு போட்டு பேசலாமா? அமெரிக்காவே வியந்து பார்க்கும் தலைவர் பிரதமர் மோடி. அவரை கைநீட்டி பேச விஜய்க்கு அருகதை இல்லை. முதல்வரை அங்கிள் என்றும், பிரதமரை மிஸ்டர் என்றும் பேசுகிறார். எனக்கு வருகிற கோவத்துக்கு விஜய் முகத்திலேயே ஓங்கி குத்த வேண்டும் போல இருக்கிறது” என பேசியிருந்தார்.
இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் ரஞ்சித் மீது தவெகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Edit by Prasanth.K