வெள்ளி, 28 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (09:47 IST)

கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்! - விஜய்க்கு இலங்கை அமைச்சர் பதில்!

Vijay Katchatheevu

தவெக மதுரை மாநாட்டில் கச்சத்தீவை மீட்பது குறித்து விஜய் பேசியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக இலங்கை அமைச்சர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அதில் பேசிய தவெக தலைவர் விஜய் “தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் பிரச்சினையை தீர்க்க கச்சத்தீவை மீட்க வேண்டும்” என பேசியிருந்தார்.

 

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் “தற்போது அங்கே தேர்தல் காலம் என்பதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறி வருகிறார்கள். அதை நாம் பொருட்படுத்த தேவையில்லை. அரசு தரப்பில் இருந்து யாராவது கருத்து தெரிவித்திருந்தால் நாம் கவனம் செலுத்தலாம். ஆனால் எது எப்படியாகினும் கச்சத்தீவை ஒருபோதும் நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K