1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. adhav arjuna explain why cm vijay changing his room

முதலமைச்சர் விஜய்க்கு புதிய அறை எதற்காக?.. ஆதவ் அர்ஜுனா விளக்கம்!...

joseph vijay
தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் விஜயின் அறை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றப்படவிருக்கிறது. அதற்கான பணிகளுக்கு ரூ.5 கோடியில் டெண்டர் விடப்பட்டிருக்கிறது. ஆனால், இதை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். விவசாயிகள் கஷ்டத்தில் இருக்கும் போது முதல்வருக்கு புது அறை தேவையா? என எதிர்கட்சி தலைவர் உதயநிதியும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று சட்டசபையில் விளக்கமளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘தமிழகத்திற்கு புதிய தலைமை செயலகம் கட்டவேண்டுமென கலைஞரும், ஜெயலலிதாவும் ஆசைப்பட்டனர். முதலமைச்சரை சந்திக்க அரசு அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் பலர் வருகிறார்கள். அவர்கள் அமரும் வகையில் வரவேற்பு அறை கூட இல்லை.

முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் 100 சதுர அடி கூட இல்லாத சிறிய அறைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். போதிய கழிப்பறை வசதியும் இல்லை. தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்தால் போதாது.. தன்னை சந்திக்கும் எல்லோரும் அமரும் வகையில் தற்காலிக ஏற்பாடாகவே முதல்வர் தனது அறையை மாற்றுகிறார். முதலமைச்சர் வசதிக்காக அறை மாற்றப்படவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது சாதாரண ஹோட்டலில் தங்கிய எளிமையானவர் முதல்வர் விஜய்’ என அவர் பேசினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
காலை உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர் ஏன்?.. எ.வ.வேலு கேள்விக்கு ராஜ்மோகன் பதிலடி...