காலை உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர் ஏன்?.. எ.வ.வேலு கேள்விக்கு ராஜ்மோகன் பதிலடி...
கடந்த திமுக காலத்தில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களுக்கும் தவெக பெயரை மாற்றி தங்களின் ஸ்டிக்கரை ஒட்டி வருகிறது என எதிர்கட்சி தலைவர் உதயநிதி தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு எங்கள் தளபதி ஸ்டாலின் கொண்டு வந்த முதல்வன் காலை உணவு திட்டத்துக்கு ஏன் காமராஜர் பெயரை வைத்தீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன் அரசு திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டது பற்றி பலரும் பேசுகிறார்கள். 1996ம் வருடம் திமுக ஆட்சி காலத்தில் ஜெ.ஜெ.சினி சிட்டி என்ற பெயர் எம்.ஜி.ஆர் திரைப்பட நகர் என மாற்றப்படுவதாக கலைஞர் அறிவித்தார்.
அம்மா பசுமை வீடு கலைஞர் கனவு இல்லம் என மாற்றப்பட்டது. அம்மா மருந்தகம் முதல்வர் மருந்தகம் என மாற்றப்பட்டது. அம்மா மினி கிளினிக் முதல்வன் கிளினிக் என மாற்றப்பட்டது. காலை உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயரை விட பொறுத்தமான பெயர் இருக்க முடியாது என அவர் பதிலடி கொடுத்தார்.