1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 மே 2025 (08:31 IST)

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

பாகிஸ்தான் ராணுவம் சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
போர் நிறுத்த  உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் சில இடங்களில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது என்று கூறிய அவர், பாகிஸ்தானின் அத்துமீறல் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
 
நேற்று மாலை ஐந்து மணியுடன் தாக்குதலை நிறுத்துகிறோம் என்று இந்தியா - பாகிஸ்தான் அறிவித்த நிலையில், ஒரு சில மணி நேரங்களில் ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
 
இந்த நிலையில் மீண்டும் பாகிஸ்தான் க்குதல் நடத்தினால், மீண்டும் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
 
Edited by Siva