1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 மே 2025 (16:42 IST)

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..!

நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லியின் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
பாஜகவின் முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த இந்த வழக்கில், காங்கிரஸ் கட்சி, நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தொடர்ந்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
 
அப்போது, சோனியா, ராகுல் உள்ளிட்டவர்கள் மீது நேரடி விசாரணை மேற்கொள்வதற்காக நோட்டீஸ் அனுப்பவேண்டும் என அமலாக்கத் துறை கோரியது. ஆனால், நேரடி ஆதாரங்கள் இல்லையென நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப மறுத்தது.
 
இந்நிலையில், இன்று நடந்த விசாரணையில், புதிய ஆதாரங்களின் அடிப்படையில் நீதிபதி விஷால் கோக்னே, சோனியா, ராகுல், சாம் பிட்ரோடா உள்ளிட்ட 8 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
 
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 8ஆம் தேதி நடைபெறும்.  
 
 
Edited by Mahendran