1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (07:18 IST)

அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் ராகுல் காந்திக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்..!

Rahul Gandhi Adhani
அதானி நிறுவனங்களுக்கு எதிரான ஹிண்டன்பெர்க்  அறிக்கைக்கு ராகுல் காந்தியுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பெர்க்   என்ற ஆய்வு நிறுவனம், கடந்த 2023 ஆம் ஆண்டு அதானி நிறுவனங்கள்  பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு கூறியது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் பெரும் தாக்கம் ஏற்பட்டது. குறிப்பாக அதானி நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமாக சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இஸ்ரேலின் உளவு அமைப்பு இந்த விவகாரம் தொடர்பாக சில தகவல்களை சேகரித்தது. அதில், காங்கிரஸ் வெளிநாட்டு பிரிவு தலைவர் மற்றும் ராகுல் காந்தியின் ஆலோசகர் ஷாம் மெட்ரோ என்பவர் இதில் தொடர்பில் இருந்ததாக சர்வர் எனப்படும் கம்ப்யூட்டர் தகவல் அமைப்பிலிருந்து எடுக்கப்பட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஹிண்டன்பெர்க்  க அறிக்கையை தயாரிப்பதில் ராகுல் காந்திக்கு தொடர்பு இருப்பது குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
ரஷ்யாவில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் பத்திரிகை ஒன்றும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால், இது குறித்து இஸ்ரேலின் உளவு அமைப்பு எந்த கருத்தையும் வெளியிடவில்லை. காங்கிரஸ் கட்சியும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஹிண்டன்பெர்க்  அறிக்கையில் ராகுல் காந்திக்கு தொடர்பா என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva