அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!
அகமதாபாத்தில் மினி வங்கதேசம் உருவாக்க முயற்சி செய்த லல்லா பிகாரி எனும் முகம்மது கான் கைது செய்யப்பட்டார். சண்டோலா ஏரி என்ற பழமையான ஏரியை சுற்றி உள்ள இடங்களை ஆக்கிரமித்து வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களின் 4,000 குடியிருப்புகள் இடிக்கப்பட்டன.
அகமதாபாத் மாநகரக் குற்றப்பிரிவு, ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மோட்டி ஜேர் கிராமத்தில் இருந்து மெஹமூத் பதான் எனும் லல்லா பிகாரியை கைது செய்தனர். இவர்தான் சண்டோலா ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வங்கதேச குடிமக்கள் சட்டவிரோதமாக குடியேறுவதற்கான ஏற்பாடுகளில் முக்கிய பங்காற்றியதாக குற்றச்சாட்டு உள்ளது.
போலீசாரின் விசாரணையில் லல்லா பிகாரி போலியான மின் கட்டண ரசீது மற்றும் போலியான வாடகை ஒப்பந்தங்களை பயன்படுத்தி, ஏரிக்கரையிலுள்ள நிலங்களை விற்பனை செய்தும் வாடகைக்க்கு விட்டும் இருந்துள்ளதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆவணங்களை வைத்து சட்டவிரோத வீடுகள் கட்டப்பட்டு, அதில் வசித்த பலரும் ஆவணங்கள் இல்லாத வங்கதேச குடிமக்களாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. தற்போது ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Siva