வாரத்தின் கடைசி நாளிலும் பங்குச் சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
வாரத்தின் கடைசி நாளிலும் பங்குச்சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கும் நிலையில், இன்று வாரத்தின் கடைசி நாளிலும் பங்குச்சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்கள் மகிழ்ச்சிக்கு காரணம்.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய போது சரிவில் இருந்தாலும், சில நிமிடங்களில் பங்குச்சந்தை எழுந்துவிட்டது என்பதும், தற்போது மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 903 புள்ளிகள் உயர்ந்து 85,795 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 12 புள்ளிகள் சரிந்து 26,629 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, மாருதி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டெக் மகேந்திரா, டைட்டன், ட்ரெண்ட் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளது.
அதேபோல் ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இண்டிகோ, இன்ஃபோசிஸ், ஐடிசி, ஜியோ பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலைகள் சரிவில் வர்த்தகம் ஆகி வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Edited by Siva