2 நாள் சரிவுக்கு பின் இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை: இன்றைய நிப்டி நிலவரம்..!
இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக காலையில் உயர்ந்தாலும், மதியத்திற்கு மேல் திடீரென சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்திருந்தது. இந்த நிலையில், இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போதே குறியீடுகள் ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று 585 புள்ளிகள் உயர்ந்து, 85,153 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 185 புள்ளிகள் உயர்ந்து, 26,075 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தை நிலவரப்படி, நிஃப்டியில் உள்ள 50 பங்குகளில், டாடா கன்ஸ்யூமர் , பாரதி ஏர்டெல் ஆகிய பங்குகள் மட்டுமே சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. மற்ற அனைத்து பங்குகளும் நல்ல லாபத்தில் வர்த்தகமாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva