1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. perumal murugan recommended books from agal vilakku

அகல் விளக்கு புத்தகங்களை வாங்க பெருமாள் முருகனும் பரிந்துரை செய்தார்... நீதிமன்றத்தில் வாதம்...

perumal
கடந்த திமுக ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பல நூல்கள் போலியானவை என எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறிய குற்றச்சாட்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக அகல் விளக்கு என்கிற பதிப்பகத்தில் இருந்துதான் ஏராளமான போலி புத்தகங்கள் வந்துள்ளது. அப்படி ஒரு பதிப்பகத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை என்று பெருமாள் முருகன் கூறியிருந்தார். இதையடுத்து,  போலீசார் நடத்திய சோதனையில் அந்த புத்தகங்கள் எல்லாமே திமுக காலத்தில் வாங்கப்பட்டவை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது..

அகல்விளக்கு பதிப்பகத்திலிருந்து பெரியார் அலுவலகம் மட்டுமில்லாமல் சென்னை கன்னிமாரா மற்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்கலிலும் உள்ள பல நூலகங்களுக்கும் போலியான நூல்கள் சென்றது தெரிய வந்திருக்கிறது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அகல்விளக்கு புத்தகங்களை வாங்குவதற்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் பரிந்துரை செய்தார் என பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நூலகர் காமாட்சி தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார். பெருமாள் முருகன் உள்ளிட்ட பரிந்துரை குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பரிந்துரை செய்தனர்’ என அவர் கூறினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ரோஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்தது உண்மைதான்: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு..