பினாமி பெயர்களில் குவாரிகள்!.. மூர்த்தி வீட்டில் சோதனை நடப்பதன் பின்னணி?...
திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீடு மற்றும் அவரின் பினாமிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் இந்த சோதனைக்கு பின்னணி என்ன என்பதை பார்ப்போம்;
மதுரை வாடிப்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி பகுதிகளில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி குடும்பத்திற்கு சொந்தமான கல், செம்மண் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. மதுரை சுற்று வட்டாரங்களில் கல் மற்றும் செம்மண் குவாரிகளில் சில அமைச்சர் மூர்த்தி குடும்பத்தினர் பெயர்களில் செயல்படுவதாக சொல்லப்படுகிறது..
மேலும், மதுரை சுற்று வட்டாரங்களில் சில குவாரிகள் உரிய அனுமதி இல்லாமல் பினாமி பெயர்களில் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் மதுரை சுற்றுவட்டாரங்களில் உள்ள மூர்த்திக்கு சொந்தமான மற்றும் அவரின் பினாமிகளிள் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கல், செம்மண் ஆகியவை வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வாடிப்பட்டி மற்றும் சத்திர வெள்ளாளம்பட்டியில் வரம்புகளை மீறி வெட்டியெடுக்கப்பட்ட கனிமங்களால் அரசுக்கு ரூ.5.39 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் கோட்டாட்சியர்கள் புகார் அளித்தனர்.
அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் குவாரிகளை நடத்தி வரும் மூர்த்தி, அவரின் உறவினர்கள் மற்றும் பினாமிகளிடம் இன்று சோதனை நடந்து வருகிறது.