1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. iran started to attack gulf countires again

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி!.. சவுதி, குவைத், ஈராக் மீது ஈரான் தாக்குதல்!..

iran america
அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் நாட்டின் மீது தாக்குதலை துவங்கியது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். சமீபத்தில்தான் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது..

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் அமைந்துள்ள சவுதி, துபாய், பஹ்ரைன், அபுதாபி ஆகிய நாடுகளை குறித்து ஈரான் தாக்குதலை நடத்தியது. மேலும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது இது.

இது சிக்கலை ஏற்படுத்தவே ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி அதில் உடன்பாடு ஏற்பட்டு இரண்டு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனாலும் ஹார்மூஸ் வழியாக வரும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதால் கோபமடைந்த அமெரிக்கா ‘ஈரானை மீண்டும் தாக்க போகிறோம் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டோம்’ என அறிவித்தது.

தற்போது இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றன. அமெரிக்காவின் தொடர் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளும் முழுவதும் ஈரான் தாக்குதலை நடத்த துவங்கியுள்ளது. 4 மாதங்களுக்கு பிறகு சவுதி அரேபியா மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சவுதி அரேபியா மட்டுமில்லாமல் குவைத், பஹ்ரின், ஈராக் ஜோர்டான், கத்தார் ஆகிய நாடுகளின் மீதும் ஈரான் தாக்குதலை கடுமையாக்கியிருக்கிறது. இது அங்கே வாழும் மற்றும் பணி புரியும் மக்களிடம் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... બધા વાંચો