1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. ibm asking indian employes leave america

அமெரிக்காவை விட்டு வெளிய போங்க!.. இந்தியர்களுக்கு IBM நிறுவனம் எச்சரிக்கை...

ibm
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் செயல்படும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களான IBM, HCL உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவில் இந்தியர்களை பணியமர்த்தி வருகிறது. இதற்காக, H-1B விசா மற்றும் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப் செய்து வருகிறது.

ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கர்கள் அல்லாத மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணிபுரிவதில் பல சிக்கல்களை உருவாக்கி வருகிறார். H-1B விசா தொகையை பல மடங்கு உயர்த்தி விட்டார்.  இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான IBM தனது கன்சல்டிங் பிரிவில் பெரும்பாலான பணிகளுக்கு விசா மற்றும் கிரீன் போர்டு ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்த முடிவு செய்திருக்கிறது..

இதனால் பாதிக்கப்படும் அமெரிக்க ஊழியர்கள் வேறு நாட்டுக்கு இடம் பெயர்ந்து பணியை தொடரலாம் அல்லது ராஜினாமா செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முடிவெடுக்க 3 வார கால அவகாசமும் வேலையை விட்டு செல்ல 3 மாத ஊதியமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 31ம் தேதி கடைசி வேலை நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் பணியும் இந்தியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ நகை காணிக்கை.. யார் இந்த வர்தமான் ஜெயின்?..