1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. JEE Main 2027 Session 1 Application Correction Window Opens at jeemain.nta.nic.in

2027ஆம் ஆண்டின் JEE மெயின் தேர்வு.. தேசிய தேர்வுகள் முகமை முக்கிய அறிவிப்பு...

ஜேஇஇ மெயின் 2027
JEE மெயின் 2027 ஜனவரி அமர்விற்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளும் வசதி இன்று  முதல் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் வரும் நவம்பர் 29-ஆம் தேதி இரவு 11:50 மணி வரை தங்களின் விண்ணப்ப படிவத்தில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
 
இந்த தேர்விற்கு இதுவரை 15.73 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், ஜனவரி 22, 23, 24, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முதற்கட்ட தேர்வு நடைபெற உள்ளது. 
 
இதற்கான அனுமதி சீட்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியிடப்படும். விண்ணப்ப திருத்தத்தின் போது, மாணவர்கள் தங்களின் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பாலினம், பிரிவு  , கையொப்பம், தேர்வு மைய நகரம் மற்றும் தேர்வு மொழி ஆகியவற்றை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
அதேசமயம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, நிரந்தர மற்றும் தற்போதைய முகவரி, அவசத் தொடர்பு விவரங்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மாற்ற முடியாது. விண்ணப்பத்தில் செய்யப்படும் மாற்றங்களால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதனை இணையவழியில் செலுத்தித் திருத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
11ஆம் வகுப்பு படித்தவர் டெல்லி மருத்துவமனையில் டாக்டர்.. போலி மருத்துவ பட்ட சான்றிதழ் கும்பல் கைது...