பெண் அதிகாரிக்கு மிரட்டல்!.. திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு..
பெண் அரசு அதிகாரியை மிரட்டியதாக திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் ரிஷி வந்தியம் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றவர் வசந்தம் கார்த்திகேயன். இவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் லலிதா அளித்த புகாரில் தன்னை சாதி பார்த்து பணிபுரிவதாக இழிவான முறையில் வசந்த் கார்த்திகேயன் பேசி தொலைபேசியில் மிரட்டினார் எனவும், பணியில் நீடிபது குறித்தும் அவர் மிரட்டியதாக அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
அதோடு சமூகவலைத்தளத்தில் அநாகரிமாக மெசேஜ் செய்தது மட்டுமல்லாமல் அவதூறு பரப்பியதாகவும் அவர் புகார் கூறியிருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் தியாகதுருவம் காவல்துறையினர் வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே பெண் கலெக்டருக்கு ஆபாசம் குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிட்டது.