வெள்ளி, 28 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bala
Last Modified: வெள்ளி, 28 நவம்பர் 2025 (16:09 IST)

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?
தேவயானியின் கணவர் ராஜகுமாரன் தொடர்ந்து பல பிரபலங்களை பற்றி அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வருவது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. திடீரென இவருக்கு என்ன ஆயிற்று? ஏன் இவ்வாறெல்லாம் பேசிக்கொண்டு வருகிறார்? இவரும் திரை துறையில் இருந்தவர் தானே? ஏன் பிரபலங்களைப் பற்றி வாய்க்கு வந்ததை எல்லாம் கூறுகிறார் என இவர் மீது அதிருப்தியில் இருக்கின்றனர். ஒன்று இரண்டு பிரபலங்களை பற்றி கூறினால் பரவாயில்லை.
 
ஒட்டுமொத்த முன்னணி நடிகர்களை பற்றி எல்லாம் இவர் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார். கமல் விக்ரம் இவர்கள் எல்லாம் ஒரு நடிகர்களா என கேள்வி கேட்டிருக்கிறார். இயக்குனர் மகேந்திரனை பற்றியும் இவர் ஒரு சிறந்த படைப்பாளியே இல்லை என்றெல்லாம் பேசியிருக்கிறார். சமீபத்தில் விஜயின் அரசியல் வருகையை பற்றி கூட பேசி இருந்தார். டெபாசிட் கூட வாங்க முடியாது விஜயால் என்று கூறியிருந்தார். இப்படி தொடர்ச்சியாக பல அவதூறு கருத்துக்களை பேசி வரும் ராஜகுமாரனை தேவயானி ஒன்றும் சொல்லவில்லையா?
 
தேவயாணி மேம் தேவையா இனி என்றெல்லாம் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் செந்தில் பிரபு ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். மகேந்திரனை பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? இவர் எடுத்த படங்களில் நீ வருவாய் என திரைப்படம் மட்டும் தான் ஓரளவுக்கு பேசப்படக்கூடிய படமாக அமைந்திருந்தது. மற்ற படங்கள் எல்லாம் படமாவா எடுத்து வைத்திருந்தார்? விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தை அவருடைய காதல் கதையை மையப்படுத்தியே எடுத்திருந்தார்.

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?
ஆனால் அந்த படம் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாமல் போனது. எப்பேர்ப்பட்ட இயக்குனர் மகேந்திரன். இன்று திரை துறையில் கால் பதிக்க ஆசைப்பட்டு வரும் ஒவ்வொரு இளைஞரும் மகேந்திரனின் படைப்புகளை தொடாமல் வர முடியாது. குறுகிய படைப்புகளை அவர் கொடுத்திருந்தாலும் ஒவ்வொன்றும் முத்துக்கள் என்று சொல்லலாம். ஏன் ரஜினியே தனக்கு பிடித்த இயக்குனர் மகேந்திரன் தான் என பாலச்சந்தர் முன்பே சொல்லி இருந்தார். அப்பேர்ப்பட்ட இயக்குனரை இந்த மாதிரி ராஜகுமாரன் பேசுகிறாரே. தேவயானிக்கு இதெல்லாம் தெரியாதா? என்றெல்லாம் செந்தில் பிரபு கூ கூறியிருக்கிறார்.
 
ஒரு காலத்தில் எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவர் மகேந்திரன். ரிஷிமூலம் தங்கப்பதக்கம் போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் மகேந்திரன். அந்த படங்களை முதலில் நாடகமாக எழுதினார். அதில் தங்க பதக்கம் நாடகத்தில் படத்தில் சிவாஜி ஏற்றிருந்த கதாபாத்திரத்தை நாடகத்தில் செந்தாமரை ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு தான் படமாக அது வெளியானது. ஒரு சமயம் கல்லூரி விழாவிற்கு சென்றிருந்த எம் ஜி ஆர் ஐ பார்த்து மகேந்திரன் நீங்க எல்லாம் என்ன நடிகர் என்று அவரையே எதிர்த்து கேள்வி கேட்டிருந்தார் மகேந்திரன்.
 
இருந்தாலும் எம்ஜிஆருக்கு அது கோபத்தை ஏற்படுத்தவில்லை. இந்த பையனிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என நினைத்து அவரை சென்னைக்கு வரவழைத்து பிரபல கதாசிரியர் சோவின் துக்ளக் பத்திரிக்கையில் வேலைக்கு சேர்த்து விட்டார் எம்ஜிஆர். அதன் பிறகு கதாசிரியராகவும் பணியாற்றினார் மகேந்திரன். ஆரம்பத்தில் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எத்தனையோ முயற்சிகள் எழுதன. அதில் எம்ஜிஆர் படமாக்க நினைத்தார். அந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் நாவலின் திரைக்கதையை எழுதும் பொறுப்பை மகேந்திரனிடம் தான் ஒப்படைத்தார் எம்ஜிஆர். அதை முழுவதும் மகேந்திரன் எழுதி முடித்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் படமாக்க முடியவில்லை. இப்படி எம் ஜி ஆரின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் மகேந்திரன். இதெல்லாம் ராஜகுமாரனுக்கு தெரியுமா தெரியாதா என செந்தில் பிரபு கேள்வி கேட்டிருக்கிறார்.