தொடர் சர்ச்சையாகும் பேச்சு.. தேவயானியின் கணவருக்கு என்ன ஆச்சு?
பிரபல பத்திரிக்கையாளர் ஜீவா தன்னுடைய யூடியூப் சேனலில் தேவயானியின் கணவரான ராஜகுமாரனை பற்றி கடுமையாக பேசியிருக்கிறார். இதோ அவர் கூறியது: தேவயானியின் கணவர் சமீபகாலமாக என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சரியான ஒரு சிகிச்சை தேவைப்படும் என்று நான் கருதுகிறேன். அப்படி என்ன பேசுகிறார் என்றால் இயக்குனர் மகேந்திரன்லாம் ஒரு ஆளா? அப்படி என்ன படம் எடுத்துவிட்டார்? அவரையெல்லாம் ஒரு பெரிய ஆளுன்னு கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறி இருக்கிறார். அது மட்டுமல்ல ராமநாராயணன் 100 படங்களுக்கு மேல் பண்ணியிருக்கிறார். ஆனால் மகேந்திரன் இரண்டு மூன்று படங்கள்தான் பண்ணியிருக்கிறார். அவரை இந்த அளவு கொண்டாடி வருகிறீர்கள். அவர் படமே நான் பார்க்க மாட்டேன். எனக்கு பிடிக்காது .
அதுவும் உதிரிப்பூக்கள் படம் பார்த்தேன். அது ஒரு படம் என்று கொண்டாடுகிறார்கள். அதில் என்ன இருக்கிறது என பேசி இருக்கிறார் ராஜகுமாரன். இவர் பேசியதை உற்றுநோக்கும் பொழுது ஒரு பழமொழி தான் ஞாபகம் வருகிறது. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. மகேந்திரன், பாலு மகேந்திரா, பாரதிராஜா அவர்களுக்கும் முன்னோடியான ஸ்ரீதர் இவர்கள் படங்களை எல்லாம் பார்க்காமல் ஒரு திரைப்பட மாணவன் உருவாகிறான் என்றால் அதுவே சமூகத்திற்கு ஒரு சீர்கேடு .ஏனென்றால் இவர்களுடைய படங்களில் இருந்து தான் கதை சொல்லுகிற விதம் ஹீரோயிசத்துக்கு மாற்றாக படைப்புகளை கொண்டு வந்தது இவர்களுடைய படங்களில் தான்.
இதில் பாலச்சந்தரும் அடங்குவார். இவர்களுடைய கருத்துக்களில் வசனங்களில் நமக்கு மாறுபாடு இருக்கலாம். ஆனால் இவர்கள் திரை துறையில் ஒரு வித்தியாசத்தை கொண்டு வந்தார்கள். திரைமொழியின் வடிவத்தை மாற்றினார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது. ராஜகுமாரன் என்ன படம் எடுத்துவிட்டார். இரண்டு மூன்று டப்பா படங்களை எடுத்து வைத்தவர். இவர் யார் என்று கேட்டால் தேவயானியின் கணவர் என்றுதான் இன்று எல்லோருக்கும் தெரியும். இவர் பெயரை சொல்லி இவருக்கு என அடையாளம் கிடையாது. இவர் எல்லாம் மகேந்திரன் என்ன படம் எடுத்துட்டாரு என்று சொல்லும் பொழுது திரைத்துறையை ரசிக்க தெரியாதவர் என்றுதான் நமக்கு தோன்றுகிறது.
தேவயானி கொடுத்த வாழ்க்கையினால் இவருடைய முகம் நமக்கு தெரிகிறது. இல்லாவிட்டால் இவர் யார் என்றே நமக்கு தெரியாது. யோசித்துப் பாருங்கள். உதிரிப்பூக்கள் படமே ஒரு படம் இல்லை என்று இவர் கூறுகிறார். உதிரிப்பூக்கள் படத்தை பொறுத்தவரைக்கும் அந்த படத்தின் கிளைமாக்ஸில் ஒரு வில்லன் மக்களை பார்த்து பேசுகிற அந்த டயலாக். அதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாத இவர் ஒரு இயக்குனரா? உதிரினா என்ன? தேவயானி கணவர் மாதிரியான ஆட்கள் தான் உதிரி மாதிரி. அரசியலும் சினிமா பார்வையும் இல்லாத இவர் எல்லாம் சினிமாவில் இருக்கிறார் என்றால் இவர் தான் உதிரி. அதே மகேந்திரன் தான் ரஜினியை வைத்து ஜானி என்ற படத்தை எடுத்தார். அதில் எந்த மாதிரியான எமோஷனல் இருக்கும்.
இன்று தேவயானி கணவருக்கு தெரியுமா? ஒரு திருடனை கொலைகாரனாக மாற்றுவதும் காதல் தான். அதே கொலைகாரனான திருடனை இன்னொரு பெண்ணுடைய காதலை கண்டு அதுக்காக தன் வாழ்க்கையை தியாகி ஆக்குகிறான். இந்த உணர்வுகளை மகேந்திரன் எவ்வளவு அழகாக கடத்தியிருக்கிறார். எவ்வளவு அழகியல் தன்மையோடு கடத்தி இருப்பார்.. ஒரு படைப்பாளியின் திறமையை எண்ணிக்கையை வைத்து இவர் கணக்கிடுகிறார் என்றால் இவருடைய மண்டையில் சரக்கு இல்லை என்று தான் தோன்றுகிறது.
இவர் மனநிலை சரியில்லாமல் பேசி இருக்கிறார் என்று நாம் கடந்து போனாலும் இன்றைக்கு இருக்கிற தலைமுறைகளுக்கு மகேந்திரன் யார் பாலு மகேந்திரா யார் என்றெல்லாம் தெரியாது. இந்த மாதிரி மனநிலை சரியில்லாதவர்கள் உளறுவதைக் கேட்டு மகேந்திரன் இரண்டு படம் தான் எடுத்திருக்கிறாரா? ஆனால் ராமநாராயணன் நூறு படம் எடுத்திருக்கிறாரே. அப்போ அவர் தான் ஒரு முன்னணி இயக்குனர் என்று தவறாக புரிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். இப்படி யாரும் நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிவை நான் போடுகிறேன் என பத்திரிக்கையாளர் ஜீவா கூறியுள்ளார்.