இட்லி கடை படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இட்லி சாம்பார் கொடுத்து வரவேற்ற தனுஷ் ரசிகர்கள்!  
                                       
                  
                  				  தனுஷ் தனது நான்காவது படமாக (இயக்குனராக) இட்லி கடை படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.  தனுஷுடன் பல முன்னணி நடிகர்கள் நடிக்க படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார். படம் அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
				    											
  																												
									  இதையடுத்து படத்துக்கு தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பிரம்மாண்டமான விளம்பரங்களைப் படக்குழு மேற்கொண்டது. மேடைகளில் தனுஷ் சொன்ன இட்லி வாங்க கஷ்டப்பட்டோம் ரக சிம்பதி கதைகள் ஆதரவையும் கேலிகளையும் ஒருசேரப் பெற்றன.
				  				  இந்நிலையில் இன்று இட்லி கடை படம் ஆயுதபூஜையை முன்னிட்டு ரிலீஸாகியுள்ளது. படம் பார்க்க வந்த ரசிகர்களை சென்னை கோயம்பேடு ரோகினி தியேட்டரில் இட்லி மற்றும் சாம்பார் கொடுத்து தனுஷ் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.