செவ்வாய், 4 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 4 நவம்பர் 2025 (09:44 IST)

திரிஷ்யம் மூன்றாம் பாகத்தை முதலில் பார்க்க அவர்கள்தான் தகுதியானவர்கள்… இயக்குனர் ஜீத்து ஜோசப் கருத்து!

திரிஷ்யம் மூன்றாம் பாகத்தை முதலில் பார்க்க அவர்கள்தான் தகுதியானவர்கள்… இயக்குனர் ஜீத்து ஜோசப் கருத்து!
மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இதே போல அதன் இரண்டாம் பாகமும் ரிலீஸாகி வெற்றி பெற்றது. தற்போது மூன்றாம் பாகத்துக்கான வேலைகளில் ஜீத்து ஜோசப் ஈடுபட்டு வருகிறார். த்ரிஷ்யம் முதல் பாகத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன் நடித்தார். அதையடுத்து இரண்டாம் பாகம் கோவிட் பெருந்தொற்று காரணமாக நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி வெற்றிபெற்றது.

இதையடுத்து மூன்றாம் பாகத்துக்கான படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. திரிஷ்யம் மூன்றாம் பாகம் மலையாளம் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் ரிலீசாகும் என சொல்லப்பட்டது. ஆனால் மலையாளத்தில்தான் முதலில் ரிலீஸாகும் என இயக்குனர் ஜீத்து ஜோசப் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “திரிஷ்யம் படத்தின் ஜார்ஜ் குட்டியோடு மலையாள ரசிகர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் அவர்கள்தான் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்தைப் பார்க்க தகுதியானவர்கள்” எனக் கூறியுள்ளார்.