செவ்வாய், 4 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth K
Last Updated : செவ்வாய், 4 நவம்பர் 2025 (09:40 IST)

ப்ரவீனை அடித்துப் போட்ட கம்ரூதின்! Red Card எவிக்‌ஷன் கன்பார்ம்! Biggboss வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

kamrudin fight

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் சென்றுள்ள நிலையில் ஆட்டம் சுவாரஸ்யம் ஆகும் என பார்த்தால் மேலும் மோசமாகியுள்ளது. கடந்த ஒரு மாதமாக பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கத்திக் கொண்டே இருப்பதை வைல்ட் கார்ட் எண்ட்ரி போட்டியாளர்கள் விமர்சித்ததுடன், ஆட்டத்தை சுவாரஸ்யமாக மாற்ற தாங்கள் வந்திருப்பதாக கூறினார்கள்.

 

அந்த வகையில் இந்த வார வீட்டு தலயாக திவ்யா கணேஷ் தேர்வானார். ஆனால் அவருமே பல விவாதங்களில் தொடர்ந்து பாருவிடம் கத்திக் கொண்டிருக்கும் நிலையே தொடர்கிறது. இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது..

 

கம்ருதீன் - ப்ரவீன் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக வெடித்துள்ளது. ஹவுஸ்மேட்ஸ் தடுத்துமே இருவரும் அதை மீறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் கம்ருதீன் ஓங்கி அடித்ததில் ப்ரவீன் கீழே விழுந்தார்.

 

கம்ருதீனின் இந்த நடவடிக்கைகளை ஏற்கனவே பிக்பாஸ் எச்சரித்து வந்த நிலையில், ப்ரவீனை அடித்ததற்காக கண்டிப்பாக கம்ரூதினுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அவர் வெளியேற்றப்படுவார் என பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K