வசூலில் மோசம். இணையத்தில் ட்ரோல்கள்.. ரவி தேஜாவின் ‘மாஸ் ஜாத்ரா’வுக்கு நேர்ந்த சோகம்!  
                                       
                  
				  				  
				   
                  				  தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி தேஜா. தெலுங்கு சினிமாவை வாரிசு நடிகர்களே அதிகளவில் கோலோச்சும் நிலையில் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்து வெற்றிபெற்றவர் ரவி தேஜா.
				    											
  																												
									  அவரின் பல ஹிட் படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. ஆனால் சமீபகாலமாக அவரின் கேரியரில் ஒரு தேக்க நிலை எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் இயக்குனர் பானு இயக்கத்தில் மாஸ் ஜதாரா படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த படத்தில் நடித்த மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது “இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் அதிர்ச்சி ஆகவில்லை என்றால் நான் சினிமாவை விட்டேப் போய்விடுகிறேன்” எனக் கூறியிருந்தார்.
				  				  இந்நிலையில் தற்போது படம் ரிலீஸாகி மிக மோசமான விமர்சனங்களையும், வசூலையும் பெற்று வருகிறது. தயாரிப்பாளர் நாக வம்சிக்கு மூன்றாவது தொடர் தோல்வியாக அமைந்துள்ளது. இந்நிலையில் ரிலீஸுக்கு முன்பு ராஜேந்திர பிரசாத் பேசியதை எடுத்துப் போட்டு தற்போது படக்குழுவினரைட் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.