புதன், 15 அக்டோபர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (16:14 IST)

இதுமட்டும் நடக்காவிட்டால் மெல்போர்ன் மைதானத்தில் நிர்வாணமாக நடப்பேன்: மேத்யூ ஹைடன்

இதுமட்டும் நடக்காவிட்டால் மெல்போர்ன் மைதானத்தில் நிர்வாணமாக நடப்பேன்: மேத்யூ ஹைடன்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதம் அடிக்கத் தவறினால், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தான் நிர்வாணமாக வலம் வருவேன் என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் சவால் விடுத்துள்ளார்.
 
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.
 
இந்த நிலையில், ஒரு பாட்காஸ்டில் பேசிய மேத்யூ ஹைடன், “வரவிருக்கும் ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் கண்டிப்பாக சதம் அடிப்பார். அவர் சதம் அடிக்கத் தவறினால், நான் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக வலம் வருவேன்” என்று கூறியுள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது. 
 
ஹைடனின் இந்த சவால், ஆஷஸ் தொடருக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Edited by Mahendran