டி 20 தொடரில் இந்திய அணி படைத்த புதிய சாதனை… பெட்டிப்பாம்பாய் அடங்கிய UAE!
ஆசியக் கோப்பை தொடரில் நேற்று இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் UAE அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி, இந்திய பந்துவீச்சின் அபார தாக்குதலால் வெறும் 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி 13 ஓவர்கள் மட்டுமே விளையாடியது.
யுஏஇ அணியில் முதல் இரண்டு பேட்ஸ்மேன்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் மிக சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்த, சிவம் துபே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த எளிய இலக்கை எதிர்த்து விளையாடிய இந்திய அணி பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே அதிரடியாக விளையாடி 4.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதன் மூலம் இந்திய டி 20 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங்கில் தங்களது மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 93 பந்துகள் மீதமிருக்க இந்திய அணி தங்கள் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.