1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vaiko comment about anirudh wedding in greece

சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா?!.. ஸ்டாலினை விளாசிய வைகோ...

vaiko
இசையமைப்பாளர் அனிருத்தின் திருமணம் சமீபத்தில் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டனர்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் காவ்யா மாறனுக்கு உறவினர். ஏனெனில் காவ்யா கலாநிதி மாறனின் மகள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனிருத்தின் உறவினர். லதா ரஜினிகாந்த் சகோதரர் மகன்தான் அனிருத். எனவேதான் ஸ்டாலினும், ரஜினியும் அந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகின. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ ஜெயலலிதா தன் வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்து வைத்த போது திமுக கடுமையாக விமர்சித்தது.. ஆனால் இன்றைக்கு திமுக தங்கள் குடும்பத்தினரின் திருமணத்தை கிரீஸ் நாட்டில் நடத்துகிறார்கள்.. சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா?’ என்று வைகோ கேள்வி எழுப்பியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நிறைய கடன் இருக்கு!.. அவமானம்.. அதான் கொள்ளையடிச்சேன்.. நிஷாந்த் வாக்குமூலம்...