அருள் விக்னேஷுக்கு சம்மன்.. விரைவில் விசாரணையில் ஆஜர்..
பெண் மாவட்ட கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருப்பூர் எஸ்.பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்திருக்கிறது. திருப்பூர் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங் இன்று கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தார். அதற்கு முன்பே விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் முன்னிலையில் நேரில் ஆஜராகும் படி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு சம்மன் கொடுக்கப்பட்டது.
2 காவல்துறை அதிகாரிகள் இன்று காலை நேரில் சென்று தனது வீட்டிலிருந்த அருள் விக்னேஷிடம் சம்மனை அளித்தனர். எனவே விரைவில் அருள் விக்னேஷ் விசாரணையில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 காவல்துறை அதிகாரிகள் இன்று காலை நேரில் சென்று தனது வீட்டிலிருந்த அருள் விக்னேஷிடம் சம்மனை அளித்தனர். எனவே விரைவில் அருள் விக்னேஷ் விசாரணையில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

