1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn government appointed ias team for mla

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்!.. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு அமைப்பு..

arul vignesh
பெண் கலெக்டருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தொடர்ந்து ஆபாச மெசேஜை அனுப்பியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அருள் விக்னேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கை விசாரிக்க திருப்பூர் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு அருள் விக்னேஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஒருபக்கம் இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் உஷா தலைமையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தக் குழுவில் மதுமதி, சுமதி, சுனிதாஜோ ஆகியோர் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த வழக்கை மேற்பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இப்படி பண்ணாதீங்க!.. விஜய்க்கு தாடி பாலாஜி சொன்ன அட்வைஸ்!...