1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. story behind kallakurichi mla arul vignesh

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ்!. யார் இந்த அருள் விக்னேஷ்?...

arul vignesh
பெண் மாவட்ட கலெக்டருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் விசாரணையை எட்டியிருக்கிறது. அருள் விக்னேஷ் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என தவெக கூறி வந்தநிலையில் கடந்த ஜூலை மாதமே தலைமைச் செயலரிடம் சம்பந்தப்பட்ட பெண் கலெக்டர் புகார் அளித்தது தெரிய வந்திருக்கிறது. அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் வேறு வழியில்லாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இன்று காலை கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அருள் விக்னேஷிடம் சம்மன் கொடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அவர் விசாரணையில் ஆஜராகவிருக்கிறார். இந்நிலையில் யார் இந்த அருள் விக்னேஷ் என்பது பற்றி பார்ப்போம்.

விஜயை பொறுத்தவரை தனது மக்கள் இயக்கத்தில் பல வருடங்களாக பணிபுரிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தார். மேலும், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்த பலருக்கும் சீட் கொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவர்தான் இந்த அருள் விக்னேஷ். அருள் விக்னேஷ் கடந்த 2025ம் வருடம் அக்டோபர் மாதம்தான் தவெகவில் இணைந்தார். தேர்தலுக்கு ஆறு மாதங்களுகுக் முன்பு தவெகவில் இணைந்தவருக்கு மாணவர் அணி அமைப்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது..

அருள் விக்னேஷுக்கு திருமணமாகி சிவசங்கரி என்கிற மனைவியும், ரவீனாஸ்ரீ என்கிற பெண் குழந்தையும் உள்ளது. எம்.எஸ்.சி படித்துள்ள அருள் விக்னேஷ் தச்சூரில் புல்வெளி கிரிக்கெட் மைதானம் நடத்தி வந்தார்.

தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜீவ் காந்தியை விட 798 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அனேகமாக இவரிடமிருந்து மாணவர் அணி அமைப்பாளர் பொறுப்பு பறிக்கப்படும் என தெரிகிறது. எம்.எல்.ஏவாக அருள் விக்னேஷ் தொடர்ந்து நீடிப்பாரா என்பது விரைவில் தெரிந்து விடும்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தீபம் ஏற்றாததற்கு கோவில் நிர்வாகம் தான் காரனம்.. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட தமிழக அரசு...