1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 ஏப்ரல் 2025 (16:24 IST)

வக்பு வாரிய திருத்த சட்டம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தவெக விஜய் வரவேற்பு..!

TVK Vijay
இஸ்லாமிய சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்றம் எடுத்திருக்கும் முக்கிய முடிவை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பாராட்டியுள்ளார்.
 
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கீழ், புதிய உறுப்பினர்கள் நியமிக்க கூடாது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வக்ஃப் சொத்துகள் மீதான எந்த புதிய நடவடிக்கையும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு இஸ்லாமியர்களுக்குச் சக்தி தரும் ஒன்றாகும்,” என குறிப்பிட்டுள்ளார்.
 
இது மட்டுமல்லாமல், "இந்த தீர்ப்பு, மத்திய அரசு கொண்டு வந்திருந்த பாசிச அணுகுமுறைக்கு எதிரானது. இது இஸ்லாமிய சமூகத்தின் வயிற்றில் பாலை வார்த்தது போல. அவர்கள் உரிமைகளை காப்பதற்காக நாங்கள் தொடரும் இந்த சட்டப் போராட்டத்தில், உச்சநீதிமன்றம் நியாயம் வழங்கியுள்ளது," எனத் தெரிவித்தார்.
 
மேலும், “ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் உறுதியாக துணை நிற்கும். இந்த வழக்கில் நமக்காக சட்டபோராட்டம் நடத்திய மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனுஸிங் விக்கும், அவரது சட்டக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் கூறினார்.
 
 
Edited by Mahendran