விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?
பிளஸ் டூ பொதுத்தேர்வு தினத்தில் விபத்துக்குள்ளாகி, ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர் அசத்தல் மதிப்பெண் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், மாணவ-மாணவிகள் பலர் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை செய்துள்ளனர். அந்த வகையில், தேர்வு தினத்தில் விபத்தில் சிக்கி ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய மாணவர் சமய ரித்திஷ் என்பவர் இன்று தேர்வு முடிவுகளை பார்த்து தனது மதிப்பெண்களை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இப்போதும் சிகிச்சை பெற்று வரும் அவர் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 600க்கு 565 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.
விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர், தேர்வு தினத்தில் ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து நேர்ந்த போதிலும், வலியால் காயத்தினால் துன்பப்பட்ட போதிலும், பிளஸ் டூ தேர்வு எழுதி 565 மதிப்பெண் எடுத்துள்ள அவரை, உடன்படித்த மாணவர்களும் ஆசிரியர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Edited by Mahendran