சிந்தூர் என்பது ஒரு மதத்திற்கு தொடர்புடையது.. வேறு பெயர் வையுங்கள்: காங்கிரஸ்..
பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீரிலும் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்கியதைத் தொடர்ந்து, அந்த ராணுவ நடவடிக்கைக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என பெயரிடப்பட்டது. இதை ஒரு மதத்துடன் தொடர்புபட்டதாக கூறி, காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் பேசும் போது, "பண்பாட்டு வட்டாரங்களை சேர்ந்த நிபுணர்களுடன் நடந்த விவாதங்களில், சிந்தூர் ஒரு குறிப்பிட்ட மதத்துடன் குறிப்பாக திருமணத்திற்கு பின் பெண்கள் அடையாளமாக பயன்படுத்தும் இந்து கலாச்சாரத்துடன் தொடர்புடையது என கூறினர். வேறு பெயர் வைத்திருந்தால் நலம். ஆனாலும், இது பெரிய விஷயம் இல்லை. முக்கியமானது என்னவென்றால், பாகிஸ்தானுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது," என்றார்.
சிந்தூர் என்ற சொல் இந்துக் கலாச்சாரத்தில் திருமணத்தின் அடையாளமாக இருக்கிறது.
ஆனால், பாதுகாப்பு வட்டாரங்களின் தகவல்படி, இந்த பெயர் திட்டமிட்ட வகையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டது. பஹல்காம் பகுதியில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள், அதில் பெரும்பாலானவர்கள் 25 பேர் இந்து ஆண்கள் என கூறப்படுகிறது. அவர்கள் பலர் புதிதாக திருமணம் செய்தவர்கள் அல்லது தங்கள் குடும்பத்துடன் பயணித்தவர்கள். பயங்கரவாதிகள் அவர்களை தேர்ந்தெடுத்து பைசரன் மேடுகளில் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பெயர், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் துயரத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகிறது,.
Edited by Siva