லாகூர் தொடர் வெடிகுண்டு வெடிப்பை அடுத்து கராச்சியிலும் குண்டுவெடிப்பு: மக்கள் பீதி..!
ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதன் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் முக்கிய நகரம் லாகூரில் இன்று காலை பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக விமான நிலையத்திற்கு அருகே உள்ள கோபால் நகர், நசீராபாத் பகுதிகளில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன.
அதிக சத்தத்துடன் வெடிகள் ஏற்பட்டதால் மக்கள் திகைத்து வீடுகளில் இருந்து வெளியே ஓடியனர். பாதுகாப்பிற்காக அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. இதனால் லாகூர் விமான நிலையத்திலும் பயணிகள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதேவேளை, பாகிஸ்தானின் மற்றொரு முக்கிய நகரமான கராச்சியிலும் இன்று காலை வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கராச்சியில் வெடிக்குண்டு வெடித்தது பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்ததால் அங்கும் பொதுமக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர்.
இந்த நிகழ்வுகள் பாகிஸ்தானில் தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளன.
Edited by Mahendran