இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!
இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று அதிகாலை, இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" என்ற தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்த அதிகாரப்பூர்வ ஆதாரங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், இந்தியாவின் போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக சில வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வதந்திகளுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீன அரசின் குளோபல் டைம்ஸ் என்ற ஊடகம், இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக செய்தி வெளியிட்டது.
இந்த செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, இது போன்ற தவறான தகவல்களை வெளியிடும் முன் உண்மை நிலையை சரிபார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், "ஆபரேஷன் சிந்தூர்" குறித்து வதந்திகளை பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பொறுப்பான ஊடகமாக குளோபல் டைம்ஸ் செயல்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
Edited by Mahendran