இந்திய ராணுவ வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு..!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்திய ராணுவத்தினருக்கு, ஏர் இந்தியா தங்கள் விமானத்தில் சென்றால் சில சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தினரின் வீர தீர செயலை கௌரவிக்கும் வகையில், ஏர் இந்தியா சற்று முன் சில சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் இந்த மாத இறுதி வரை பயணம் செய்யும் ராணுவ வீரர்களுக்கு, முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டால் 100% பணம் திருப்பி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜூன் 30 வரை எந்தவித கட்டணமும் இன்றி ஒரு முறை பயண நேரத்தை மாற்றிக் கொள்ளும் சலுகையும் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இதுபோல், மற்ற விமான நிறுவனங்களும் சில சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran