திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 19 அக்டோபர் 2023 (20:31 IST)

பங்காரு அடிகளார் மறைவு எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்கார அடிகளார் இன்று மறைந்ததை அடுத்து  மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் இன்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். இதனை அடுத்து நாளை அதாவது அக்டோபர் 20ஆம் தேதி மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
 
பங்காரு அடிகளார் அவர்களுக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இரங்கல் செலுத்துவதற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பங்காரு அடிகளாரின் மறைவை அடுத்து அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva