1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 மே 2025 (12:09 IST)

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஏற்கனவே இரண்டு ஆலோசனைக் கூட்டங்களை பிரதமர் மோடி தலைமையில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது திடீரென இன்னொரு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தலைமை தளபதியுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரா  உள்ளிட்டோரும் பங்கேற்று உள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் நடைபெறும் மூன்றாவது ஆலோசனை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த கூட்டத்தில் எல்லை மீறிய பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விளக்கங்களை பிரதமரிடம் முப்படை தளபதிகள் அளித்து வருவதாகவும், பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva