திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2023 (13:13 IST)

வகுப்பறையில் ஒழுகிய மழைநீர்.. குடையை பிடித்தப்படி வகுப்பறையில் பள்ளி மாணவர்கள்..!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வகுப்பறையில் மழை நீர் ஒழுகுவதை அடுத்து மாணவர்கள் குடை பிடித்து கொண்டே வகுப்பறையில் அமர்ந்திருந்த காட்சியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
சிவகங்கை மாவட்டம் பெரும்பாலை தொடக்கப்பள்ளியில்  உள்ள வகுப்பறை ஒன்றில் மழை நீர் ஒழுகியது. இதனை அடுத்து சாப்பிடும் தட்டு, குடை ஆகியவற்றை பிடித்தபடியே வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்துள்ளனர். 
 
மேலும் இந்த பள்ளியின் மற்ற வகுப்பறைகளும் மிகவும் மோசமாக உள்ளதாகவும் பலமுறை  முறையிட்டும்  மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனை அடுத்து உடனடியாக பெரும்பாலை தொடக்கப்பள்ளியில் மராமத்து பணிகள் செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்
 
Edited by Mahendran