1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 மே 2025 (12:32 IST)

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் அன்னையர் தின வாழ்த்துக்களை தங்களது சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
 
அந்த வகையில், முன்னணி நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது பக்கத்தில் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ’அன்பின் மொழியை நாம் அனைவருக்கும் அறிமுகம் செய்த அற்புத கடவுள், அன்னையின் தூய அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை. இவ்வுலகில் தரணி போற்றும் நம் தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அதேபோல், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது அன்னையர் தின வாழ்த்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்:
 
மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் #MothersDay வாழ்த்துகள்!
 
Edited by Siva