1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ragupathi says dmk has no connection with veeramani

வீரமணி வீடியோ க்ளியராக இல்லை.. அதனால அரெஸ்ட் பண்ணல!. திமுக நூதன விளக்கம்!...

veeramani
கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி சிறுமிகளிடம் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறி ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் விபச்சார தடுப்பு பிரிவில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வீரமணி மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டது.  ஆனால் வீரமணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. அந்த புகாரும் கிடப்பில் போடப்பட்டது.

2003ம் வருடம் முதல் 13 முதல் 18 வரையிலான பல சிறுமியின் வாழ்க்கையை வீரமணி சீரழித்ததாக சொல்லப்படுகிறது. எனவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது தன்னை கைது செய்யாமல் இருக்க போலீஸ அதிகாரிகளுக்கு வீரமணி லஞ்சம் கொடுத்ததாக சொல்லப்பட்டது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஊட்டி ஆகிய இரண்டு இடங்களிலும் 130 கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்து அதில் 70 கோடியை போலீஸ் அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வீரமணி லஞ்சம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் முதலமைச்சரின் ஜோசப் விஜய் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து தற்போது வீரமணிக்கு நெருக்கமான இரண்டு பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், வீரமணிக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதாக அவர் குடும்பத்தினர் கூறி இருக்கிறார்கள்..

ஒருபக்கம் கடந்த திமுக ஆட்சி வீரமணியை காப்பாற்றிவிட்டு அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சமீபத்தில் தவெக அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக சென்னை அறிவாலயத்தில் விளக்கம்ளித்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி ‘போலீசாருக்கு ஆதாரமாக கிடைத்த வீடியோவில் வீரமணியின் முகம் தெளிவாக தெரியவில்லை. ஜெம் வீரமணி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்கிறார்கள்.. அப்புறம் எப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது? வீரமணி வழக்கில் புதிய ஆதாரங்கள் சாட்சி அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக காத்திருந்தோம்.. ஜெம் வீரமணி வழக்கை கைவிடுவதாக சொல்லவில்லை.. ஆதாரங்களுக்காக காத்திருந்தோம்.. ஜெம் வீரமணிக்கும் திமுகக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஒரு மணி நேரத்துல ஓடிப்போயிட்டா எப்படி தெரியும்?!.. உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!...