1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin appreciated jdc prabhakar

சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் சூப்பர்.. பாராட்டிய முக ஸ்டாலின்!.. நடந்தது என்ன?...

jdc prabakar
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 108 தவெக எம்.எல்.ஏக்களில் ஜேடிசி பிரபாகரும் ஒருவர். சென்னை ஆயிரம் விளக்கு  தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அவர் அரசியலில் இருக்கிறார். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது அதிமுகவில் இருந்தார்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சபாநாயகராகவும் ஜேடிசி பிரபாகர் இருந்திருக்கிறார். எனவே, அவருக்கு சீட் கொடுத்து அவரை சபாநாயகர் ஆக்கிவிட்டர் முதலமைச்சர் ஜோசப் விஜய். சபாநாயகராக பொறுப்பேற்றுவது முதலே சட்டப்பேரவையை மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார் ஜேடிசி பிரபாகர்.

பொதுவாக சபாநாயகர் என்பவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுவார். ஆனால் ஜேடிசி பிரபாகர் சட்டசபை விதியை பின்பற்றி செயல்பட்டு வருகிறார். ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் விதியை மீறி செயல்பட்டால் உடனே கண்டித்து அவை குறிப்பிலிருந்து நீக்கிவிடுகிறார். இதை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினே சமீபத்தில் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் கவிஞர் வைரமுத்து முக ஸ்டாலினை சந்தித்து பேசியிருக்கிறார்.. இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘திமுக தலைவர் ஸ்டாலினும் நானும் சட்டமன்ற நேரலையை 45 நிமிடங்கள் பார்த்தோம்.. ஜேடிசி பிரபாகர் அவையை சிறப்பாக நடத்துகிறார் என ஸ்டாலின் பாராட்டினார். ‘சட்டமன்றத்தின் ஆட்டநாயகன் என்று சமூகவலைத்தளங்களில் அவரை பேசுகிறார்கள்’ என்று நான் சொன்னேன்.  அதற்கு ‘அப்படியா?’ என்று அவர் கேட்டுக் கொண்டார்’ என பதிவிட்டிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஆதவ் அர்ஜுனா மட்டுமே பேசினா நாங்க எப்ப பேசுறது?.. பிரேமலதா கோபம்!...