1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. james vasanthan comment against vijay

இவன் அடிப்படை அறிவு இல்லாதவன்.. யாரை சொல்கிறார் ஜேம்ஸ் வசந்தன்?....

james vijay
திமுகவின் ஆதரவாளராக பார்க்கப்படும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஊடகங்களுக்கு
விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது.. அது வெறும் கவர்ச்சி மட்டுமே என தொடர்ந்து சொல்லி வந்தார். ,மேலும், விஜய் ரசிகர்களையும், அவரை ஆதரிப்பவர்களையும் தற்குறிகள் என தொடர்ந்து சொல்லிவந்தார்.

அதன்பின் 2026 தேர்தலில் தவெக 108 தொகுதி வெற்றி பெற்று ஆட்சியமைத்து விஜய் முதலமைச்சரான பின்னரும் ஜேம்ஸ் வசந்தனை விஜய் மற்றும் தவெகவை விமர்சிப்பதை நிறுத்தவில்லை.

நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய் சர்க்காரியா கமிஷன் மிசா காலத்தில் நடந்தது பற்றியெல்லாம் பேசினார். மேலும், சர்கார் கமிஷன் அறிக்கைபடி கலைஞர் கருணாநிதி, அவரின் மருமகன் முரசொலி மாறன் ஆகியோர் லஞ்சம் வாங்கியதாக கூறினார்.

கடந்த ஆட்சியில் கட்சி நிதி என்கிற பெயரில் கோடிக்கணக்கில் பணம் உதயநிதி மற்றும் ஸ்டாலினுக்கு சென்றதாக அமலாக்கத்துறை சொல்லியிருப்பதாக விஜய் பேசியிருந்தார். இதை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் ‘இவன் அடிப்படை பண்பும் அறிவும் அறவே இல்லாத ஒருவன்.. என்று உணருமோ அந்த அறிவற்ற கூட்டம்’ என பதிவிட்டிருக்கிறர்.

அவர் விஜயின் பெயரை அதில் குறிப்பிடவில்லை என்றாலும் அவர் விஜயைத்தான் சொல்கிறார் என பலரும் நினைக்கிறார்கள்.அவரின் இந்த பதிவுக்கு திமுகவினர் ஆதரவும், விஜயின் ஆதரவாளர்கள் எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்,
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஞாயிறு Low BP.. நேத்து High BP.. சட்டசபையில் புலம்பிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!..