1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. jcd prabhakar feeling bad about dmk mlas

ஞாயிறு Low BP.. நேத்து High BP.. சட்டசபையில் புலம்பிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!..

jcd prabakar
நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய் 50 வருடங்களுக்கு முன்பு வெளியான சர்க்கார் கமிஷன் தொடர்பான அறிக்கையில் திமுக ஊழல் பற்றி குறிப்பிட்டிருந்ததை பற்றி பேசினார். கலைஞர் கருணாநிதி, அவரின் மருமகன் முரசொலி மாறன் லஞ்சம் பெற்றாதாக கூறினார்.

மேலும் அமலாக்கத்துறை அறிக்கையின் படி கடந்த திமுக ஆட்சியில் கட்சி நிதி என்கிற பெயரில் முக ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் பணம் போனதாக கூறினார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. மேலும் இது தொடர்பாக பதிலளிளிக்க எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. எனவே, உதயநிதி உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்..

அதேபோல் இன்று சட்டசபை கூடியபோது திமுக முன்னாள் அமைச்சர்கள் ஏ.வ வேலு மற்றும் கே.என்.நேரு ஆகியோர் இது தொடர்பாக விளக்கமத்தனர். மிசா காலத்தில் என்ன நடந்தது என்பது முதல்வருக்கு தெரியாது.. அதேபோல் சர்க்காரியா கமிஷன் திமுக மீது குற்றமில்லை என சொல்லிவிட்டது. இல்லாத ஒன்றை பொய்யான குற்றச்சாட்டுகளை முதல்வர் விஜய் பேசியிருக்கிறார்.. எனவே, அவ்ர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் சபாநாயகர் அதை ஏற்கவில்லை..

ஏற்கனவே பலமுறை இந்த சட்ட சபையில் சர்க்காரியா கமிஷன் பற்றி பலரும் பேசியதைத்தான் முதல்வர் விஜய் பேசியிருக்கிறார். எனவே, அவர் பேசியதை ஏற்கமுடியாது என சபாநாயகர் கூறிவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சபாநாயகர் பிரபாகர் ‘ஞாயிற்றுக்கிழமை எனக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டது.. மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொன்னார்கள்..

ஆனால் முதலமைச்சர் பேசுவதை கேட்பதற்காக நேற்று நான் சபைக்கு வந்தேன்.. திமுகவினரின் செயலால் எனது குறைந்த இரத்த அழுத்தம் சரியாகி இரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது.. அவையின் மாண்புதான் முக்கியம்.. திமுகவினரை வெளியேற்றியதை நான் தவறாக கருதவில்லை.. திமுகவினர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பதுதான் நான் செய்த தவறா?’ என அவர் வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சிகரெட் புகையால் இந்தியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!.. ஆய்வில் அதிர்ச்சி...